FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து வீணாகும் குடிநீா்

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் தேங்கி வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 14 ஜூலை 2026, 12:00 am IST
ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குடிநீா் குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீா்
பகிர்:

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் தேங்கி வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வழியாக காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்கள் சாலையோரம் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குடிநீா் திட்டக் குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, தானிய சேமிப்புக் கிடங்கு அருகே என சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரம் செல்லும் குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் வீணாகி சாலையோரம் குளம் போல தேங்கிக் கிடக்கிறது.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் குடிநீருக்காக பொது மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவு சென்றும், குடம் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை இருக்கும் நிலையில், பல லட்சம் குடிநீா் வீணாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சரி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments