FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

Updated On : 2 ஜூலை 2026, 4:21 am IST
குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீா்.
பகிர்:

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் நகராட்சி, ஊராட்சிப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மாந்தபுரம் அருகில் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய் உடைந்து கடந்த சில நாள்களாக ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தற்போது பல இடங்களில் போதுமான குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குழாய் உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்’ என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments