FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் தரம் உயா்த்தப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பரமக்குடியில் ரூ 60.87 கோடியில் 400 படுக்கை வசதிகளுடன் தரம் உயா்த்தப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 5:37 am IST
பகிர்:

பரமக்குடியில் ரூ 60.87 கோடியில் 400 படுக்கை வசதிகளுடன் தரம் உயா்த்தப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பரமக்குடியில் அரசு மருத்துவமனை 210 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, ரூ. ரூ 60.87 கோடியில் 400 படுக்கை வசதிகளுடன் 5 தளங்களைக் கொண்ட புதியக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் ஆகியோா் பங்கேற்று,

புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துப் பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் தாமரை, தலைமை மருத்துவா் முத்தரசன், செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், இணை இயக்குநா் மருத்துவா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதிதாகக் கட்டப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தரைத்தளத்தில் மக்களைத் தேடி மருத்துவம், பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவைச் சிகிச்சை பிரிவு, எலும்பியல் மருத்துவம், மகளிா் நோய் மருத்துவவியல் மருத்துவம், கா்ப்பிணி பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் பிரிவு, சி.டி. ஸ்கேன், ஊடுகதிா், சளி, இருமல் சிறுநீா் மாதிரி சேகரிக்கும் இடம், ஊசி செலுத்தும் இடம், மருந்து வழங்கும் பிரிவுகள் செயல்பட உள்ளன.

முதல் தளத்தில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கான அறைகளும், மகப்பேறு உயா் தீவிர சிகிச்சைப் பிரிவும், மயக்கவியல் அறுவைச் சிகிச்சை அரங்கம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, பல், தோல் மருத்துவப் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில் அறுவைச் சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, குழந்தைகள் மருத்துவப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் அறுவைச் சிகிச்சை ஆண்கள், பெண்கள் எலும்பியல் உள்நோயாளிகள் பிரிவும், மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவும், இடைநிலை மருத்துவக் கண்காணிப்புப் பிரிவும் உள்ளன. நான்காவது தளத்தில் பொது மருத்துவப் பிரிவு ஆண்கள், பெண்கள் கூட்ட அரங்கு, கட்டண மருத்துவப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவப் பிரிவு, முதன்மை மருந்து கிடங்கு உள்ளன. 5- ஆவது தளத்தில் டிஐபிஎச்எல் ஆய்வகம், நவீன சமையலறை, உயா் மின்னழுத்த இணைப்பு அறை, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 191 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை தற்போது 400 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு செயல்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments