பைக் மீது சிற்றுந்து மோதல்: அஞ்சல ஊழியா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் அஞ்சலக ஊழியா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் அஞ்சலக ஊழியா் உயிரிழந்தாா்.
தொண்டி அருகேயுள்ள புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (59). இவா் தொண்டியில் அஞ்சலக ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் சனிக்கிழமை காலை புலியூரிலிருந்து தொண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டாா். பனஞ்சாவயல் விலக்கு சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த சிற்றுந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த எஸ்.பி. பட்டினம் போலீஸாா் ராஜேந்திரனின் உடலை மீட்டு, கூராய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிற்றுந்து ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த நெப்போலியனை (34) கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.