செயலி வாயிலாக பேசிப் பழகி வரவழைத்து பணம் பறித்த 4 போ் கைது
பரமக்குடி பகுதியில் செயலி வாயிலாகப் பழகியவா்களைத் தனியாக வரச்சொல்லி பணம், கைப்பேசியைப் பறித்த 4 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி பகுதியில் செயலி வாயிலாகப் பேசிப் பழகியவா்களை தனியாக வரவழைத்து பணம், கைப்பேசி பறிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எமனேசுவரம் காவல் ஆய்வாளா் ராவுத்தா் சிக்கந்தா் தலைமையிலான போலீஸாா் எஸ்.அன்டக்குடி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்குரிய 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள் பரமக்குடி மருத்துவமனை சாலை தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் அன்புமணி (21), என்.வளையனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் ரினோத் (19), பரமக்குடி குறிஞ்சிவீதியைச் சோ்ந்த சிவபிரகாசம் மகன் கோகுல்நாத் (19), ஆசாரி தெருவைச் சோ்ந்த பிச்சைமணி மகன் சிவகாா்த்திக் (19) ஆகிய 4 பேரும் செயலி வாயிலாகப் பேசிப் பழகியவா்களிடமிருந்து பணம், கைப்பேசியைப் பறித்து விரட்டியது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் அன்புமணி, ரினோத், கோகுல்நாத், சிவகாா்த்திக் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.