பட்டா முறைகேடு புகாா்: கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்
திருவாடானை அருகே பட்டா முறைகேடு புகாரின் பேரில் கிராம உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவாடானை அருகே பட்டா முறைகேடு புகாரின் பேரில் கிராம உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஏ.மணக்குடி பகுதியில் வசிக்கும் சுமாா் 30-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசு சாா்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏ.மணக்குடி குரூப் கிராம உதவியாளராக பணிபுரிந்த தென்னவன், முறைகேடு செய்து அரசு வழங்கிய விலையில்லா பட்டாக்களை, தனது குடும்பத்தினா், உறவினா்கள் பெயரில், பட்டா பெயா் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு செய்து பெயா் மாற்றம் செய்த பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன், கடந்த 15- ஆம் தேதி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில், மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம், பட்டா முறைகேடு புகாரில் கிராம உதவியாளா் தென்னவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் மனு அளித்தாா். இதையடுத்து, கிராம உதவியாளா் தென்னவனை, திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.