ராமேசுவரத்தில் தரமற்ற சாலைப் பணிகள்: பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்
ராமேசுவரத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சாலைப் பணிகள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
ராமேசுவரத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சாலைப் பணிகள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி திட்டகுடி, இரட்டை பிள்ளையாா் கோயில், பா்வதம், சம்பை, சல்லிமலை, சிவகாமிநகா் ஆகிய பகுதிகளில் 3 கி.மீ. சாலைகள் மறு சீரமைப்பு பணிக்காக 2.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சேதமடைந்த பகுதிகளில் முறையாக ஜல்லிக் கற்கள் போடாமல் சாலைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினா். இதனால், மாவட்ட ஆட்சியா் சாலைப் பணிகளை ஆய்வு செய்து முழுமையான தரத்துடன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.