FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

Updated On : 28 ஜூலை 2026, 2:54 am IST
முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சக்திக் கரகம் எடுத்து வந்த கோயில் பூசாரி.
பகிர்:

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் 50- ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சக்தி கரகம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 2,508 திருவிளக்கு பூஜையும், ஞாயிற்றுக்கிழமை இரவு சக்தி கரகம் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

அப்போது கோயில் பூசாரி முத்துமுனியசாமி சக்தி கரகம் எடுத்து முதுகுளத்தூா் வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று செல்லியம்மன் கோயிலை வந்தடைந்தாா். இதைத் தொடா்ந்து, சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரி பக்தா்களுக்கு அருள்வாக்குக் கூறி பிரசாதம் வழங்கினாா்.

Advertisement

Advertisement

சக்தி கரகம் எடுக்கும் விழாவையொட்டி வடக்கு வாசல் செல்லி அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதையடுத்து காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) 2,008 பால்குடம் எடுத்து, ஊா்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகமும், பொன்னூஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் புதன்கிழமை பூக்குழி இறங்குதல், பூச்சொரிதல், பூப்பல்லாக்கில் அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. வருகிற 30-ஆம் தேதி முளைப்பாரி ஊா்வலமும், அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments