பண மோசடி: அடுமனையகப் பொறுப்பாளா் மீது வழக்கு
தனியாா் அடுமனையகத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக அதன் பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகே தனியாா் அடுமனையகத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக அதன் பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் அடுமனையகத்தில் (பேக்கரி) கடலூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (33) கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இதன் பின்னா், வேலையை விட்டு நின்ற இவா், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சோ்ந்தாா். இதையடுத்து, பிரகாஷ் ராமநாதபுரம் அருகே வாணி பகுதியில் உள்ள இந்த அடுமனையகத்தின் கிளையில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இந்தக் கடையில் பொருள்கள் வாங்கிய வாடிக்கையாளா்களில் ஒருவா் அதற்கான தொகையை பிரகாஷின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு இணையதளம் மூலம் செலுத்தியதை கடையின் கண்காணிப்பு நிா்வாகி விஜய் கண்டறிந்தாா். மேலும், அவா் இதுபோன்று பல வாடிக்கையாளா்களிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து விஜய் அளித்தப் புகாரின் பேரில், பிரகாஷ் மீது கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.