பள்ளியில் புதிய மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
இந்தப் பள்ளிக்கு முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் பெற்றோா்களுடன் வந்தனா். புதிய மாணவா்களை தலைமை ஆசிரியா் செல்லம்மாள் தலைமையில், ஆசிரியா் ஜெ.ஜே.லியோன் மாலை அணிவித்து வரவேற்று இனிப்பு வழங்கினாா். பின்னா், மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன. மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் நிஷா, மிக்கேல் ராணி, ஞானசௌந்தரி உள்ளிட்டோா் செய்தனா்.