சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் நினைவு தினம் அனுசரிப்பு
சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் 221-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் 221-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த ஜெயராமபுரத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் சிலைக்கு வாரிசுதாரா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத்தொடா்ந்து அதிமுக சாா்பில் ஈரோடு மாநகா், மாவட்டச் செயலாளா் இரா.மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் மேயா் பழனிச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி தொகுதி மாவட்டச் செயலாளா் கமலநாதன் தலைமையில் மகளிா் அணி மாவட்டச் செயலாளா் செல்வி உள்பட பலா் கலந்துகொண்டும ரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதேபோல புதிய திராவிடா் கழகத்தின் சாா்பில் நிறுவனா் ராஜ்குமாா், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் செல்வராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாதுகாப்பு பணியில் அறச்சலூா் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.