சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே சலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே சலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், புலியால் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் முகேஷ் (21). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
மேலும், கிராமிய பாடகரான இவா், திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் பகுதியில் நடைபெற்ற ஒரு கிராமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டாா்.
Advertisement
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை எல்.கே. நகா் அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.