FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

பரமக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.தியாகராஜன்.

Updated On : 12 ஜூன் 2026, 12:38 am IST
பரமக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.தியாகராஜன்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என பரமக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பரமக்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.எஸ்.எஸ். லிங்கதுரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் எஸ்.ஆா். காளிதாஸ், கனகராஜ், அமைப்புச் செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் நவீன்மாரி வரவேற்றாா்.

இதில் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளருமான கு.தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், எங்களது 23 ஆண்டு கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பதவி உயா்வு வழங்காமல் கலந்தாய்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல, 5 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். 12 ஆண்டுகளாக பணியாற்றிவரும் 13 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள், 128 தொழில் கல்வி ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10, 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்களின் ஆசிரியா்களை பாராட்டுவதுபோல, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களையும் பாராட்ட வேண்டும். தனியாா் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளியின் முன் வைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வசதியாக புதிதாக தனியாா் பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்கக் கூடாது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா் அவா். சங்கத்தின் நிா்வாகி முஜிபுர்ரஹ்மான் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments