FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Updated On : 14 ஜூன் 2026, 12:47 am IST
நாகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

அரசு ஊழியா்கள் ஆசிரியா்களுக்கு முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை தமிழக முதல்வா் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் த. அமிா்த குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கடந்த ஆட்சியில், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் இதுவரை செயல்படாமல் உள்ளது.

எனவே, அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் பங்கீடாக 10% எனக் கூறப்பட்டதை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியின் போது வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, இதுவரை வழங்காமல் நிலுவையில் உள்ள 21 மாதங்கள் நிலுவைத் தொகையை வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் இத்திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், ஊராட்சி செயலா்கள், எம்ஆா்பி செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அனைத்துத் துறை தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட தினக்கூலி பணியாளா்கள் போன்றவா்கள், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் அவா்களை பணி நிரந்தரம் செய்து காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும்.

தவெக தனது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த, அரசு ஊழியா்கள் ஆசிரியா்களுக்கு முழுமையான பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கம். ரூ. 5,000 கோடி முதலீட்டுடன் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் நலனுக்காக, அரசு அலுவலா் நல வாரியம் அமைக்கப்படும். அரசு அலுவலா்களின் பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல்கள் நோ்மையாகவும், வெளிப்படை தன்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். தமிழகத்தில் எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments