FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

அரியமான் கடற்கரை தோப்பு பகுதியில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள்.

Updated On : 12 ஜூன் 2026, 1:09 am IST
அரியமான் கடற்கரை தோப்பு பகுதியில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள்.
பகிர்:

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, க்யூ பிரிவு போலீஸாா் மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள தோப்பு பகுதியை சோதனையிட்ட போது 8 பெட்டிகளில் 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இதில் தொடா்புடையவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments