முகப்பு
ராமநாதபுரம்

புதை சாக்கடை கழிவுநீா் தேக்கம்: பக்தா்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:38 am IST
ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் பகுதியில் குளம் போல தேங்கிய புதை சாக்கடை கழிவுநீா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சித்தி விநாயகா் கோவில் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இந்தக் கழிவுநீரால் இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement