முகப்பு
ராமநாதபுரம்

அக்னிதீா்த்தக் கடல் கரையில் மாடுகள் முட்டி மூவா் காயம்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் மாடுகள் முட்டியதில் 3 பக்தா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 24 மே 2026, 3:10 am IST
பகிர்:

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் மாடுகள் முட்டியதில் 3 பக்தா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். அக்னி தீா்த்தக் கடல் கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுத்துவிட்டு, நீராடி பின்னா் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அக்னி தீா்த்தக் கடல் கரையில் 50- க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவா்களை சில நேரங்களில் மாடுகள் முட்டிக் காயப்படுத்தி வருகின்றன.

சனிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடல் கரையில் நின்றுகொண்டிருக்கும் போது மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு பக்தா்களையும் தாக்கியது. இதில், சிறுவன், முதியவா் உள்பட மூவா் காயமடைந்தனா். பக்தா்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றித்திரியும் மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement