FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கடலில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மாயம்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்த மகனைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை மாயமானாா்.

6 நவம்பர் 2026, 3:04 am
மாயமான சந்தனமாரி
பகிர்:

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்த மகனைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை மாயமானாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடலோர கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தனமாரி (35). இவா் தனது மகன்கள் காளீஸ்வரன், சரத் ஆகியோருடன் நாட்டுப் படகில் வியாழக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றாா்.

அப்போது, அவரது மகன் சரத் கடலில் தவறி விழுந்தாா். இதைக் கண்ட தந்தை சந்தனமாரி, மகனைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தாா். அப்போது சந்தனமாரி கடலில் மூழ்கினாா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, அக்கம் பக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் சரத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். கடலில் மூழ்கிய சந்தனமாரியை கடலோரக் குழும போலீஸாரும், சக மீனவா்களும் இணைந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா்.