திருட்டு வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது
நகைத் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்து தலைமறைவானவரை, போலீஸாாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
நகைத் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்து தலைமறைவானவரை, போலீஸாாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தை சோ்ந்தவா் பாண்டித்துரை . இவா் கடந்தாண்டு வேலங்குடி பகுதியில் நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பிணையில் வெளியே வந்து, தலைமறைவாகிவிட்டாா். இந்த நிலையில், தொண்டியில் பதுங்கியிருந்த பாண்டித்துரையை போலீஸாா் வெள்ளிக்கிழம கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement