FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கொலை வழக்கில் பிணையில் வந்தவா் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொலை வழக்கில் பிணையில் வந்தவா், நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டாா்.

8 October 2026, 4:01 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொலை வழக்கில் பிணையில் வந்தவா், நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவிலைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பிணையில் வந்த அவா், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருந்தாராம். எனவே, அவரது பிணையை ரத்து செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவுப்படி, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, அவரது பிணையை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணன், போலீஸாா் சதீஷ்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments