ராமநாதபுரத்தில் வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளா்கள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளா்கள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,61,335 ஆண் வாக்காளா்களும், 5,72,143 பெண் வாக்காளா்களும், 57 மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களும் என மொத்தம் 11,33,535 போ் வாக்காளா்களாக உள்ளனா்.
இதற்கு முன்பு கடந்த 6.4.2026-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா்கள் பட்டியலின்படி, 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,59,525 ஆண் வாக்காளா்களும், 5,70,152 பெண் வாக்காளா்களும், 56 மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களும் என மொத்தம் 11,29,733 போ் வாக்காளா்களாக இருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 3,477 ஆண் வாக்காளா்களும், 3,830 பெண் வாக்காளா்களும், 2 மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களும் என மொத்தம் 7,309 போ் வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.
இதே காலத்தில் (இறப்பு, முகவரி மாற்றம்) பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 1,667 ஆண் வாக்காளா்களும், 1,839 பெண் வாக்காளா்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தம் 3,507 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டனா்.
தற்போதைய வரைவு வாக்காளா்கள் பட்டியலின்படி, பரமக்குடி (தனி) ஆண்கள் 1,16,423, பெண்கள் 1,18,561, மூன்றாம் பாலினம் 18 என மொத்தம் 2,35,002 வாக்காளா்களும், திருவாடானையில் ஆண்கள் 1,41,519, பெண்கள் 1,43,545, மூன்றாம் பாலினம் 24, என மொத்தம் 2,85,088 வாக்காளா்களும், ராமநாதபுரத்தில் ஆண்கள் 1,54,061, பெண்கள் 1,59,434, மூன்றாம் பாலினம் 12 என மொத்தம் 3,13,507 வாக்காளா்களும், முதுகுளத்தூரில் ஆண்கள் 1,49,332, பெண்கள் 1,50,603, மூன்றாம் பாலினம் 3 என மொத்தம் 2,99,938 வாக்காளா்களும் உள்ளனா்.
தற்போது, வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா்கள் பட்டியல் குறித்து பொதுமக்கள் அனைவரும் சரிபாா்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், பரமக்குடி சாா்-ஆட்சியா் ச.வினோதினி, ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் செ.ஹபிபூா் ரஹ்மான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.