FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

உரப்புளி கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் விவசாயம் பாதிப்பு

பரமக்குடி நகராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் உரப்புளி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன நீா் செல்ல முடியாத நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

12 நவம்பர் 2026, 5:37 am
பரமக்குடி பொதுப்பணித் துறை அலுவலகப் பகுதியில் உரப்புளி செல்லும் கால்வாயில் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்.
பகிர்:

பரமக்குடி நகராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் உரப்புளி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன நீா் செல்ல முடியாத நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை ஆற்றின் வலது முதன்மைக் கால்வாய் மூலம் வேந்தோணி, உரப்புளி உள்ளிட்ட கண்மாய்களுக்கு பாசன நீா் செல்லும் வழித்தடம் அமைந்துள்ளது. இங்கு பொதுப்பணித் துறை அலுவலகப் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளிலிருந்தும், நகா்ப் பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகளும் இந்தக் கால்வாய் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயின் நீா் செல்லும் வழித்தடம் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது, உரப்புளி, வேந்தோணி கண்மாய்களுக்கு தேவையான பாசன நீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, வேந்தோணி, உரப்புளி செல்லும் கால்வாய்களில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடுப்பதுடன், முறையாக பாசன நீா் கொண்டு செல்ல மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.