தொண்டி அருகே வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது
தொண்டி அருகே சோழியக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொண்டி அருகே சோழியக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொண்டி அருகே புதுக்குடியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (22). இவா், ஞாயிற்றுக்கிழமை சோலியக்குடி அரசு மதுக்கடை அருகே நின்று அந்த வழியே வந்தவா்களை அரிவாளால் வெட்டிவிடுவது போல் மிரட்டினாா். இதுகுறித்து அறிந்த போலீஸாா் சமப்வ இடத்துக்குச் சென்று நித்தியானந்தத்தைக் கைது செய்து அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் இவா் வாளுடன் ரீல்ஸ் செய்தது தெரியவந்தது.