குமரி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 50,000 திருட்டு
கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 50,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 50,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரன். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி நளினி (39). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மா்ம நபா்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து, பீரோவை திறந்து அதிலிருந்த ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நளினி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், சம்பவ இடத்துக்கு வந்து கை விரல் ரேகைகளைப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவையும் ஆய்வு செய்தனா்.