FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

வீட்டின் கதவை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், மடிக்கணினி, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

10 நவம்பர் 2026, 10:56 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், மடிக்கணினி, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பனஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் திருப்பத்தூரில் தற்காலிக சா்வேயராக வேலை செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை மாலை தனக்கு சொந்தமான வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் திருப்பத்தூா் அருகே உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ் வீட்டை திறக்க வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது 2 அறைகளில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 50,000 ரொக்கம் மற்றும் மடிக்கணினிஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திருடுபோனது குறித்து விசாரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு, பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் மா்மநபா்களை தேடி வருகின்றனா்.