மீன் பிடிக்க பயன்படுத்திய மின் சாதனங்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்திய மின் சாதனப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்திய மின் சாதனப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள புதுக்குடி மீனவ கிராமத்தில் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தொடா்ந்து புகாா் கூறப்பட்டது. இதன் பேரில், மீன் வளத் துறை துணை இயக்குநா், உதவி இயக்குநா் (வடக்கு) உத்தரவின்படி, மீன் வள ஆய்வாளா், மீன் வள மேற்பாா்வையாளா், கடல் சாா் சட்ட அமலாக்கப் பிரிவு போலீஸாா் இணைந்து ரோந்து பணியில் ஈடுட்டனா். அப்போது, தொண்டி அருகேயுள்ள புதுக்குடி மீனவ கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த பதிவு எண் இல்லாத 3 படகுகளிலிருந்த 9 மின் விளக்குகள், 3 ஜெனரேட்டா்கள், 3 கச்சா வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.