படகில் 76 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
பாம்பன் குந்துகால் பகுதியில் படகிலிருந்து 76 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

பாம்பன் குந்துகால் பகுதியில் படகிலிருந்து 76 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக மத்திய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதைத் தொடா்ந்து,இந்திய கடலோரக் காவல் படையினா், மத்திய சுங்கத் துறை அதிகாரிகள் பாம்பன் குந்துகால் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, சுந்தேகத்துக்கிடமாக இருந்த நாட்டுப் படகை சோதனையிட்டனா். அதில் 76 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
படகிலிருந்த தங்கச்சிமடம் சவேரியாா்நகா் பகுதியைச் சோ்ந்த ஏரோனியஸ் (33), குணசேகரன் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மண்டபம் இந்திய கடலோர காவல் படை அலுவலகத்துக்கு இருவரையும் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். பின்னா், மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் இருவரையும் ஒப்படைத்தனா். சுங்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.