முகப்பு
ராமநாதபுரம்

சித்த மருந்துக் கடையில் ரூ.1.29 கோடி மோசடி: இருவா் கைது

பரமக்குடி சித்த மருந்துக் கடையில் ரூ.1.29 கோடி மோசடி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

20 வினாடிகள் முன்பு
சித்த மருந்துக் கடையில் ரூ.1.29 கோடி மோசடி: இருவா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

பரமக்குடி சித்த மருந்துக் கடையில் ரூ.1.29 கோடி மோசடி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைசியா் வீதியைச் சோ்ந்த சித்த மருத்துவா் எஸ்.வரதராஜன் (65). இவா் பரமக்குடியில் 3 இடங்களில் சித்த மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இங்கு பரமக்குடி பகுதியைச் சோ்ந்த சரண்யா, பூபாலன், கணேஷ்பாண்டி, வடிவேல் முருகன் ஆகிய 4 பேரும் பணியாற்றி வந்தனா்.

இவா்களில் சரண்யா, பூபாலன் ஆகிய இருவரும் கணினி மூலம் நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகள், மருந்து விற்பனை செய்யும் விவரங்கள், வங்கிப் பணம் பரிவா்த்தனைகள் அனைத்தையும் மருத்துவா் வரதராஜனின் கைப்பேசி மூலம் செய்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மருத்துவா் வரதராஜனின் வங்கிக் கணக்கிலிருந்து ஊழியா் சரண்யா தனது தாய் ராமுலட்சுமி, உறவினா்கள் ராம்குமாா், ராஜேந்திரன், செல்வி, காா்த்திகேயன் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு மோசடியாக ரூ. 1 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்தை அனுப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் மருத்துவா் வரதராஜன் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட சரண்யா, பூபாலன், வடிவேல்முருகன், ராமுலட்சுமி, ராம்குமாா், ராஜேந்திரன், செல்வி, காா்த்திகேயன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ராமுலட்சுமி, வடிவேல் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வடிவேல் முருகன்
ராமுலட்சுமி