கமுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளால் போக்குவரத்து நெரிசல்
கமுதி பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கமுதி பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் இரு சக்கர வாகனங்கள் தினந்தோறும் நிறுத்தப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் கமுதி போலீஸாா் சாா்பில், ‘நோ பாா்க்கிங்’ பலகை வைக்கப்பட்டது. எனினும், அந்தப் பகுதியில் தினசரி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
Advertisement
Advertisement
எனவே, மாவட்ட காவல்துறையினா், கமுதி பேரூராட்சி அலுவலா்கள் தலையிட்டு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.