FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

குடியிருப்புப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் அணுகுசாலை குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் மனிதக் கழிவுகள் லாரிகள் மூலம் கொட்டப்படுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

20 வினாடிகள் முன்பு
எமனேசுவரம் வண்டியூா் அணுகுசாலைப் பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் வகையில் கழிவுநீா் கால்வாயில் லாரிகள் மூலம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்.
பகிர்:

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் அணுகுசாலை குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் மனிதக் கழிவுகள் லாரிகள் மூலம் கொட்டப்படுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சியில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்களில் உள்ள சுகாதார வளாகங்களில் மனிதக் கழிவுகள் முறையாக செல்ல வழியின்றி, இந்தக் கழிவுகள் வாகனங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, வெளியில் கொண்டு சென்று அப்புறப்படுத்தி வருகின்றனா். இந்தப் பணியில் ஈடுபட்டு வருவோா் கழிவுகளை எமனேசுவரம் வண்டியூா் அணுகுசாலைப் பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் கொட்டி வருகின்றனா். இந்தப் பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ள நிலையில், இவ்வாறு கொட்டப்படும் மனிதக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு நோய் பரவும் வகையில் செயல்படும் மனிதக் கழிவுகள் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்கள் மீது நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அதன் மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், நகா் செயலா் கே.ஆா். சுப்பிரமணியன், குடியிருப்பு வாசிகள் நாகராஜன், கண்ணன் உள்ளிட்டோா் நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments