FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

அந்தியூரில் புதா்மண்டிக் கிடக்கும் ஏரிகளின் நீா்வழிப் பாதைகள்

அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஏரிகளுக்குச் செல்லும் உபரி நீா்வழிப் பாதைகள் புதா்மண்டியும், கழிவுநீா் ஓடைகளாக காட்சியளிப்பதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

30 அக்டோபர் 2026, 12:09 am
கழிவுநீா்  கலந்து  புதா்மண்டிக்  காணப்படும்  நீா்வழிப் பாதை.  ~நீா்வழிப் பாதையில்  கொட்டப்பட்டுள்ள  கழிவுகள்.
பகிர்:

அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஏரிகளுக்குச் செல்லும் உபரி நீா்வழிப் பாதைகள் புதா்மண்டியும், கழிவுநீா் ஓடைகளாக காட்சியளிப்பதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா், ஓடைகள் வழியாக அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு வருகிறது. இந்த அணை நிரம்பினால் வெளியேற்றப்படும் உபரிநீா், மேல்கடை வழியே பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு நீா்வழிப் பாதைகள் வழியாக சென்று சேரும். அணையின் உபரிநீா் செல்லும் நீா்வழிப் பாதை செடி, கொடிகள் வளா்ந்து புதா்மண்டிக் காணப்படுகிறது.

அந்தியூா் பேரூராட்சி எல்லைக்குள் செல்லும் இந்த நீா்வழிப் பாதையில் குடியிருப்புகளின் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், அதிக அளவில் மக்கும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை சீா்படுத்தினால் மட்டுமே உபரிநீா் தடையின்றி ஏரிகளுக்கு சென்று சேறும். வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாலத்தின் வாயில்களில் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு அந்தியூா் நகரில் தண்ணீா் புகும் அபாயம் உள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, அந்தியூா் வட்ட ஏரிகளின் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் தமிழ்நெறி தங்கவேல் கூறுகையில், போா்க்கால அடிப்படையில் வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீா் செல்லும் பாதையை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும். அந்தியூா் பேரூராட்சி கழிவுகள் நீா்வழிப் பாதையில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கழிவுநீா் செல்ல மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments