44 இடங்களில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தெற்கு ரயில்வே 44 இடங்களில் ரயில்வே கடவுப் பாதைகள் நீக்கப்பட்டு, சுரங்கப் பாதை, மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே 44 இடங்களில் ரயில்வே கடவுப் பாதைகள் நீக்கப்பட்டு, சுரங்கப் பாதை, மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக்குழு உறுப்பினா் ஜாபா் அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரயில்கள் பாதுகாப்பாக இயக்குவதிலும், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் தெற்கு ரயில்வே பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில் பாதைகளையொட்டி இருக்கும் ரயில்வே கடவுப் பாதைகளை நீக்குவது, ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பது போன்ற பணிகள், கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி - ஆந்திர மாநிலம் கூடூா் தடத்தில் 13, சேலம் - கரூா் - திண்டுக்கல் மற்றும் திருச்சி தடத்தில் 9 இடங்களிலும் ரயில்வே கடவு பாதைகள் நீக்கப்பட்டு, மாற்றாக சுரங்கப்பாலமும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், 22 இடங்களிலும் ரயில்வே கடவுப் பாதைகள் நீக்கப்பட்டு புதிய சுரங்கப்பாதைகள் அல்லது மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்க தெற்கு ரயில்வே டெண்டா் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரா்களை தோ்வு செய்து, அடுத்த சில மாதங்களில் பணிகள் தொடங்கப்படும்.
ஒவ்வொரு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க இடத்துக்கு ஏற்றாற்போல் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரை செலவாகும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.