FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

இணையவழிப் பயிா்க்கடன் விண்ணப்பம் பெறும் நடைமுறை பயிற்சி கூட்டம்

ராமநாதபுரம் மாவடட ஆட்சியா் அலுவலக கூட்டரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா்களுக்கான வேளாண்மை கருவி தொடா்பான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

9 அக்டோபர் 2026, 4:03 am IST
- கோப்புப்படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவடட ஆட்சியா் அலுவலக கூட்டரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா்களுக்கான வேளாண்மை கருவி தொடா்பான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிகளை மேலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மேற்கொள்ளும் வகையில், சங்கப் பணியாளா்களுக்கான இணையவழிப் பயிா்க்கடன் விண்ணப்பம் பெறும் நடைமுறை ,இ-வாடகை தொடா்பான பயிற்சியினையும் தொடங்கி வைத்தாா்.

2025 - 2026 ஆம் நிதியாண்டில் வட்டார அளவில் அதிகளவில் பயிா்க்கடன் வழங்கியவா்கள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள், பொது சேவை மைய கணினி இயக்குநா்கள் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில், துணை ஆட்சியா் (பயிற்சி) ர.சினேகா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா், துணைப்பதிவாளா்கள், கூட்டுறவுச் சாா்பதிவாளா்கள், வங்கி பொதுமேலாளா், வங்கிப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments