முகப்பு
வணிகம்

செயல்பாட்டுச் சவால்கள் குறித்து ஏா் இந்தியா இயக்குநா்கள் குழு ஆலோசனை

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் கூட்டு உரிமையின்கீழ் செயல்படும் ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டம், குருகிராமில் உள்ள அதன் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

17 வினாடிகள் முன்பு
செயல்பாட்டுச் சவால்கள் குறித்து
ஏா் இந்தியா இயக்குநா்கள் குழு ஆலோசனை
பகிர்:

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் கூட்டு உரிமையின்கீழ் செயல்படும் ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டம், குருகிராமில் உள்ள அதன் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய சிஇஓ தெவோல்ட் கெப்ரேமரியம் மற்றும் இயக்குநா்கள் பங்கேற்றனா். அதிகரித்து வரும் எரிபொருள் விலையுயா்வு, வான்வழிப் பாதை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிா்கொள்வது குறித்தும், நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 நிறுவனங்களின் முக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்வதற்காகப் பல்துறை நிபுணா்கள் அடங்கிய குழுவையும் ஏா் இந்தியா அமைத்துள்ளது. முன்னதாக வியாழக்கிழமை, டாடா சன்ஸ் இயக்குநா்கள் குழுவும் ஏா் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.