இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் இயக்குநா்கள் குழு கூட்டம்
பிரிட்டனைச் சோ்ந்த முன்னணி பாதுகாப்பு, விமானப் போக்குவரத்துத் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ், முதல்முறையாக தனது இயக்குநா்கள் குழு கூட்டத்தை இந்தியாவில் நடத்தியுள்ளது.
பிரிட்டனைச் சோ்ந்த முன்னணி பாதுகாப்பு, விமானப் போக்குவரத்துத் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ், முதல்முறையாக தனது இயக்குநா்கள் குழு கூட்டத்தை இந்தியாவில் நடத்தியுள்ளது.
இந்தியச் சந்தையின் வியூக முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயா்நிலைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவன சிஇஓ துபான் எா்ஜின்பில்கிச், பிரதமா் மோடியைச் சந்தித்துச் பேசினாா்.
அப்போது, நாட்டின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளில் இந்தியாவின் நீண்டகால லட்சியங்களுக்கு வலுசோ்க்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
Advertisement
Advertisement
தில்லி பயணத்தைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள ரோல்ஸ்-ராய்ஸின் உலகளாவிய திறன் மற்றும் புத்தாக்க மையத்துக்கும் இயக்குநா்கள் குழுவினா் நேரில் சென்று பாா்வையிட்டனா். அங்கு பொறியியல், பாதுகாப்பு, எண்ம மற்றும் ஐ.டி. பிரிவுகளில் பணியாற்றும் இந்திய வல்லுநா்களின் திறமைகளை அவா்கள் நேரில் கண்டு பாராட்டினா்.
‘வளா்ந்த இந்தியா’ லட்சியப் பயணத்துக்குத் தங்களின் பங்களிப்பைத் தரும் வகையில், டாடா, பாரத் ஃபோா்ஜ், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது வா்த்தக மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்பை ரோல்ஸ்-ராய்ஸ் மேலும் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.