FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி அருகே நெல் விதைப்பு பணியின்போது, மின்னல் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

21 அக்டோபர் 2026, 2:47 am IST
பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த பஞ்சநாதன் குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 4 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை வழங்கிய சாா்-ஆட்சியா் ச.வினோதினி.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நெல் விதைப்பு பணியின்போது, மின்னல் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகேயுள்ள பாண்டிக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்த அங்குச்சாமி மகன் பஞ்சநாதன் (50). இவருக்கு இந்துராணி என்ற மனைவியும், ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், காக்கனேந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பஞ்சநாதன் திங்கள்கிழமை மாலை நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின்னல் பாயந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ரூ. 4 லட்சம் நிவாரணம்:

இந்த நிலையில், மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த பஞ்சநாதன்

குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை பரமக்குடி சாா்-ஆட்சியா் ச.வினோதினி வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments