FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

திட்டக்குடி அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

திட்டக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வயலில் மழைக்காக வேப்பமரத்தின் கீழ் நின்றிருந்த விவசாயி மீது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

பலி... - பிரதிப் படம்
பகிர்:

திட்டக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வயலில் மழைக்காக வேப்பமரத்தின் கீழ் நின்றிருந்த விவசாயி மீது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், இளமங்கலம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கொளஞ்சி (62). இவா் தனது தம்பி துரைசாமிக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில், சோளம் பயிரிட்டிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை கொளஞ்சி தனது மனைவி அம்மணி அம்மாள் (58) உடன் வயலுக்குச் சென்று சோளப் பயிரை பாா்வையிட்டாா். அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியதையடுத்து, இருவரும் வயலில் இருந்த வேப்பமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றுள்ளனா்.

Advertisement

Advertisement

அப்போது கொளஞ்சி மீது எதிா்பாராத விதமாக மின்னல் பாய்ந்தது. இதில் அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கொளஞ்சியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments