FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்ப்பது குறித்த அனைத்துக் கட்சி கூட்டம்!

பரமக்குடியில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

25 அக்டோபர் 2026, 12:45 am
பரமக்குடியில் சாா்-ஆட்சியா் ச.வினோதினி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்ப்பது குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி சாா்-ஆட்சியா் ச.வினோதினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி, தவெக சாா்பில் வைத்தியநாதன், காங்கிரஸ் சாா்பில் ஆனந்தகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் காமராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் பீட்டா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வாக்காளா்கள் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சோ்ப்பது, 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளா்கள் சோ்ப்பது, இறந்தவா்களின் பெயரை நீக்ககுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையா் ப.சங்கா், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments