தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!
தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து தவெக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வெளிநடப்பு...
தேர்தல் ஆணையம் சார்பில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து தவெக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (அக். 23) பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2027 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, சிறப்பு முகாம்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதில் தவெக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
அப்போது எஸ்ஐஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தொடர்ந்து திமுக, தேமுதிக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 74 லட்சம் பேரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய கட்சி பிரதிநிதிகள், எஸ்ஐஆர் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தியுள்ளனர்.
Election Commission all-party meeting: Parties including TVP, DMK walk out
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.