முகப்பு

சிறுபான்மையினருக்கு பச்சை துரோகம்... வரும் காலத்தில் திமுக இருக்காது: அமைச்சர் ஆனந்த்

திமுக வரும் காலங்களில் இருக்காது என தவெக அமைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.

54 வினாடிகள் முன்பு
சிறுபான்மையினருக்கு பச்சை துரோகம்... வரும் காலத்தில் திமுக இருக்காது: அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் என். ஆனந்த் - கோப்புப்படம்.
பகிர்:

திமுக வரும் காலங்களில் இருக்காது என தவெக அமைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.

சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த் திமுகவை விமர்சித்தார்.

அவர் பேசுகையில், “இங்குள்ளோரில் அடுத்த ஆண்டு சுமார் 200 பேர் கவுன்சிலராக இந்த மேடையில் அமர்வீர்கள் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

யாரெல்லாம் நம் தலைவருக்காக உழைத்தார்களோ, அவர்கள் அனைவரும் கவுன்சிலராக, வார்டு உறுப்பினராக, சேர்மனாக ஆவதற்கு தளபதி உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்.

இதுவரை எங்களுடைய அமைச்சர்கள் யாரிடமும் யாரேனும் வந்து, ’அண்ணா எனக்கு டெண்டர் வேண்டும், அண்ணா எனக்கு பணியிடமாற்றம் வேண்டும்’ என்று ஒரு தொண்டரும் கேட்கவில்லை. மக்களுக்கு என்ன தேவைகளோ அதைச் செய்யுங்கள் என்று சொல்லக்கூடிய ஒரே கட்சி தவெக மட்டும்தான்.

உண்மையைச் சொல்லப்போனால் பொதுப்பணித்துறை அமைச்சர் சொன்னது போல, நாம் 37 முதல் 40 தொகுதி வரை விட்டுவிட்டோம். 250 ஓட்டு, 300 ஓட்டு, 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் நாம் தோற்று மக்கள் ஏமாந்துவிட்டனர்.

இன்று சிறுபான்மை மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்துள்ளது திமுக. இனி வரும் காலங்களில் அந்தக் கட்சியே இருக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் துரோகம் செய்யட்டும். எப்படியாவது நம் ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டு பண்ணி, நம் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை ஏதேனும் செய்து எதிலேனும் மாட்டி விட வேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அது கண்டிப்பாக ஒருகாலமும் நடக்காது.

ஏனென்றால் ஒரு ராசி இருக்கிறது. உலகத்தில் 700 கோடி மக்கள் இருக்கின்றனர். அதில், ஒரு 100 பேரைத்தான் மக்கள் தேடுவார்கள். அந்த 100-ல் ஒரு தலைவர் நம் தளபதி. அவருக்கு ஒரு ராசி. அவரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” என்று பேசினார்.

summary

TVK’s Anand has stated that the DMK will not exist in the future.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.