முகப்பு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் மும்முரம் காட்டும் திமுக!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி திமுக மனு தாக்கல் செய்திருப்பது குறித்து...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் மும்முரம் காட்டும் திமுக!
அருள் விக்னேஷ் | உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தமிழ்நாடு அரசு 4 போ் கொண்ட ‘உள் விசாரணைக் குழு’ அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கைகோரி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு வழங்கினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அருள் விக்னேஷ் மீதான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு மனு தாக்கல் செய்துள்ளார்.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டில் கூறப்பட்டதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை என அமைச்சர்கள் கூறுவது, முதல்வரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, விவகாரம் தொடர்பாக முதல்வரும் பொதுவெளியில் தகவல் வெளியிடாதது உள்ளிட்டவை வழக்கில் விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

DMK files petition seeking transfer of the Kallakurichi TVK MLA case to the CBI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.