ஆபாச குறுஞ்செய்தி!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் புகார்!!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எஸ்.பி. அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளதைப் பற்றி...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை (நவ. 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்தப் புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arul Vignesh, sources said on Monday afternoon.