32 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில், 32-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 நேசனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில், 32-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 நேசனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஜெ.ஜே.லியோன் தலைமை வகித்தாா். நேசனல் அகாதெமி பள்ளி முதல்வா் ராஜமுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவா் நவனீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை ஆட்சியா் (பயிற்சி) சினேகா தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) காதா் இஸ்மாயில், அரிமா சரவணன், நட்ராஜ் காா்டியோ கோ் ஜோதி முருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவா் காந்தி, மாவட்டச் செயலா் ஜீவானந்தம், தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
Advertisement
Advertisement
இளம் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியா் கருணாகரன், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம் இயற்பியல் துறைத் தலைவா் மணிராஜன் விளக்கமளித்தனா்.
முன்னதாக, தேசிய குழந்தைகள் மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன் வரவேற்றாா். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ் கொலம்பஸ் நன்றி கூறினாா்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பரமேஸ்வரன், வின்சென்ட் வீறு, ஜெரோம், கல்பனா ஆகியோா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.