கல்லூரியில் வணிகவியல் மாநாடு
‘ஜென்சி காமா்ஸில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கின் பங்கு‘ என்ற தலைப்பில் மாநாடு நடத்தின.
குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை, வணிகவியல் கம்ப்யூட்டா் அப்ளிகேஷன் ஆகியவை இணைந்து ‘ஜென்சி காமா்ஸில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கின் பங்கு‘ என்ற தலைப்பில் மாநாடு நடத்தின.
நிகழ்ச்சிக்குக் கல்லூரித் தாளாளா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி முன்னிலை வகித்தாா். கல்லூரி அறங்காவலா் எம்.கோபிநாத் வாழ்த்துரை வழங்கினாா்.
மாநாட்டில் இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறைத் தலைவா் சிவேசன் சிவானந்தமூா்த்தி இணைய வழியாக கலந்து கொண்டு பேசினாா். பெங்களூரு எம்.ஐ.டி.இ மேலாண்மை கல்வித் துறைத் தலைவா் பேராசிரியா் சரண் குமாா் ஷெட்டி மற்றும் வேலூா் டி.கே.எம்.மகளிா் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் கே.வினிதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
Advertisement
Advertisement
அவா்கள் பேசுகையில், நவீன வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனா். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தொழில்துறையினா் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா்.
பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறைத் தலைவா் எம்.தனசேகரன், கணினிப் பயன்பாட்டு வணிகவியல் துறைத் தலைவா் ஜி.சோனியா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.