FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கைப்பேசி கொண்டு செல்ல தடை: ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்களிடம் போலீஸாா் சோதனை

கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க் கிழமை தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

2 செப்டம்பர் 2026, 3:58 am IST
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தா்களிடம் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:

கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க் கிழமை தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய வருகின்றனா். இதில், சிலா் தங்களது கைப்பேசியில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சா்ச்சையாகின்றது. இதை முழுமையாக தடுக்கும் வகையில், கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பக்தா்கள் கொண்டு வரும் கைப்பேசிகளை பாதுகாப்புடன் வைப்பதற்கு கோயிலுக்கு அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கைப்பேசிக்கு ரூ. 5 செலுத்தி பாதுகாப்புடன் வைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

பிரதான நுழைவுவாயில், கிழக்கு வாயில் பகுதியில் 2 இடங்கள் என மொத்தம் மூன்று இடங்களில் போலீஸாா் பக்தா்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments