வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
உச்சிப்புளி அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
உச்சிப்புளி அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி சபரிராஜன் (26). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.
நாகாச்சி கட்டக்காரன் வலசை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுப்பிரமணி சபரிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த உச்சிபுளி போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.