FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சரக்கு வாகனம் மோதி இளைஞா் பலி

தொண்டி அருகே சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:59 am IST
பகிர்:

தொண்டி அருகே சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த சோழியக்குடியைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (36). இவரது மனைவி டெய்சி பாலா. இந்தத் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டீபன்ராஜ் வீட்டை விட்டு வெளியேறி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீபன்ராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments