FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றமடையும்'

ஒரு நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றம் பெறமுடியும் என்று கொல்கத்தா ஐஐஎஸ்ஆர் நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஆர்.என். முகர்ஜி பேசினார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஒரு நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றம் பெறமுடியும் என்று கொல்கத்தா ஐஐஎஸ்ஆர் நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஆர்.என். முகர்ஜி பேசினார்.

   காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில்(செக்ரி) நிறுவன நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியர் ஆர்.என்.முகர்ஜி பேசியது:

  வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு வேதியியலே அடிப்படையானது. வேதியியலை பிணைப்பதிலும், அதனை உடைப்பதிலும் உள்ள தத்துவம் தான் வேதிப்பொருள்களை உருவாக்குகின்றன.

Advertisement

Advertisement

   கார்பன், கார்பன் பிணைப்பு மற்றும் நைட்ரஜன் பிணைப்பு இவை இரண்டுமே உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரம் அறிவியலால் மட்டுமே ஏற்றம் பெறமுடியும் என்றார். விழாவில் செக்ரி இயக்குநர் விஜயமோகனன் கே. பிள்ளை அறிமுக உரையாற்றினார்.

     நிறுவன நாளையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் பார்வையாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு செக்ரி-யின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர்.  உலோக அரிமானம், மின் கலங்கள், மின் கனிம மற்றும் கரிமவேதியியல், மின் உலோகவியல், மின்முலாம் பூசுதல், செயல்பாட்டுப் பொருள்கள், குளோர் அல்களி ஆகியவைகள் குறித்து ஆராய்ச்சியாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

      முன்னதாக தலைமை ஆராய்ச்சியாளர் எம்.ஜெயச்சந்திரன் வரவேற்றார். நிர்வாகக் கட்டுப்பாட்டு அதிகாரி சி.கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments