கருப்பூரில் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம்
திருப்பத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சியில் அப்சா கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
திருப்பத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சியில் அப்சா கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
முகாமுக்கு அப்சா கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சோலைஅழகு சோமையா முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலைக் கழக நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வாழ்த்திப் பேசினார். பொருளியல் துறை பேராசிரியர்கள் இளங்கோவன், மரியரத்தினம் மற்றும் வணிகவியல் துறைபேராசிரியர் காளிதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முகாமில் ஒரு குளமும், ஒரு வீதியும் தேர்ந்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்தியாவுக்கு வலிமையான இளைஞர்களே முன்னோடிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அமைப்பாளர்களாக பேராசிரியர்கள் ராஜேந்திரன், நாராயணசாமி ஆகியோர் செயல்பட்டனர். பேராசிரியை கனகசுபா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.