சுகாதார விழிப்புணர்வு முகாம்
சிங்கம்புணரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு உதவித் திட்ட அலுவலர் தேன்மொழி ஞானதீபா தலைமை வகித்தார். ஆணையர் பிரதீப் வரவேற்றார். முகாமில் ஒன்றியத்துக்குள்பட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் சுகாதார வளாகங்களை பராமரித்தல், கழிப்பறைகளை பராமரித்தல், தனிநபர் கழிப்பறை முக்கியத்துவம் குறித்து சகாயச்செல்வி, உமாதேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.